மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்ணுடன் நண்பனாக பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞன்.. துயர்துடைத்த காவலர்கள்.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலம், சரல்விளை பகுதியில் வசித்து வருபவர் ஜான் கென்னடி. இவர் அப்பகுதியில் வசித்து வரும் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். பெண்ணும் கென்னடியுடன் நட்பாக பழகி வந்த நிலையில், அவன் பெண்ணை ஆபாசமாக படமெடுத்து இருக்கிறான்.
பின்னர், ஆபாச விடியோவை காண்பித்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன பெண்மணியும் தனது வீட்டிற்கு தெரியாமல் ரூ.1.50 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். 2 சவரன் தங்க நகையையும் கொடுத்துள்ளார்.
ஒருகட்டத்தில் கென்னடி தொடர்ந்து பணம் கேட்டு மிரட்ட, பெண்மணி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியும் பலன் இல்லை. இதனையடுத்து, பெண்மணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ஜான் கென்னடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.