திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடுரோட்டில் திடீரென காரில் தீ.. பதறியபடி உயிர்தப்பிய நண்பர்கள்..!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவர் பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், அனிமேஷன் கோர்ஸ் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரி மாநிலத்திற்கு சென்று குறும்படம் எடுத்துள்ளார்.
பின்னர், நேற்று வேலூர் வழியாக காரில் பெங்களூர் நோக்கி பயணம் செய்த நிலையில், இவர்களின் கார் ஆம்பூர் அண்ணாநகர் அருகே வந்துள்ளது. அப்போது, காரின் முன்புறத்தில் திடீரென புகை வந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தவே, காரில் இருந்த ஓட்டுநர், அப்துல் மஜீத், அவரின் நண்பர்கள் அனைவரும் பதறியபடி கீழே இறங்கியுள்ளனர். காரில் இருந்த கேமரா, கணினி பொருட்களை அப்துல் எடுக்க முயற்சி செய்துள்ளார்.
இதற்குள்ளாக கார் முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியதால், காரில் இருந்த கணினி, கேமரா போன்ற பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இந்த விஷயம் தொடர்பாக ஆம்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். நல்ல வேலையாக உயிரிழப்பு ஏதும் இல்லை.