ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து போராடி வெற்றிகண்ட மாணவச் செல்வங்கள்.. கண்களை ஆனந்த கண்ணீரில் நனைக்கும் நெகிழ்ச்சி நிகழ்வு.!



karnataka-mysore-school-students-protest-for-teacher-tr

தங்களுக்கு பிடித்த ஆசிரியரின் பணியிட மாற்றத்தை எதிர்த்து மாணவர்களுடன் பெற்றோரே சேர்ந்து போராடிய சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், ஹந்துவனஹள்ளி கிராமத்தின் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் நாகராஜு. இவர் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வந்தார்.

ஆசிரியர் நாகராஜு மாணவர்களுக்கு பாடம் பயிற்றுவிக்கும் முறை அவர்களால் விரும்பப்பட்டுள்ளது. குழந்தை செல்வங்களிடம் கனிவுடன் நடக்கும் ஆசிரியராகவும் அவர் இருந்துள்ளார். அதனால் மாணவர்களும் அவர்களை விரும்பி இருக்கின்றனர். 

இந்த நிலையில், இவரை பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிடவே, விஷயம் மாணவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கிராம மக்களிடம் விஷயத்தை தெரிவித்து அனைவரும் பள்ளியிலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். 

karnataka

இதுகுறித்த தகவல் அறிந்த மாவட்ட அளவிலான பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. மாணவர்கள் மற்றும் கிராமத்தினர் ஆசிரியர் நாகராஜுவின் பணியிட மாற்றத்தை எதிர்த்துள்ளனர். 

இதனையடுத்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையால், மாவட்ட கல்வித்துறை வேறு வழியின்றி ஆசிரியர் நாகராஜு தொடர்ந்து ஹந்துவனஹள்ளி கிராமத்தில் பணியாற்ற உத்தரவு பிறப்பித்தது.