மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
139 முகவரிகளை ஒரே கணக்கில் சேமித்த கார்த்திக்.. சென்னையை சேர்ந்த நபருக்கு ஜுமாடோ கடும் கண்டனம்.!
இந்தியாவில் முக்கிய நகரங்களில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பிரதானமானது ஜுமாடோ (Zomato). இந்நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி தினமும் 10 மில்லியன் மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்கின்றனர்.
மக்களுக்கு தேவையான உணவுகளை உணவகத்தில் இருந்து வாங்கி வீட்டிற்கு எடுத்து செல்லும் பணிகளை ஜுமாடோ ஊழியர்கள் மேற்கொள்கிறார்கள். நாம் உணவு ஆர்டர் செய்ய நமது இருப்பிடத்தை பதிவு செய்ய வேண்டியது செயலியில் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
நகரங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தங்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றின் இருப்பிடத்தை ஜுமாடோ செயலியில் பதிவு செய்திருப்பார்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் உணவை அவர்கள் பெறுவதற்கு எதுவாக இது அமைந்தது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர், சுமார் 139 இருப்பிடத்தை தனது ஜுமாடோ கணக்கில் பதிவு செய்து வைத்துள்ளதாக தெரியவருகிறது. இதனை கண்டறிந்த தொழில்நுட்ப குழு, அதனை கண்டித்து ட்விட் பதிவு செய்துள்ளது.
அதாவது, சென்னையை சேர்ந்த கார்த்திக் தனது பதிவு செய்ய்யப்பட்ட 139 முகவரியை நீக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. மேலும், இது ஜுமாடோ, உங்களின் ஏகபோகத்திற்கு பதிவு செய்து வைக்கும் இடமில்லை எனவும் கூறியுள்ளது.
karthik from chennai please delete some of your 139 saved addresses. this is zomato, not monopoly.
— zomato (@zomato) September 14, 2023