திருகுவளையில் உதித்த சூரியன் சென்னை காவேரியில் மறைந்தது; சோக இருளில் தமிழகம்



karunathini-dead-declared

முத்துவேல் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 

karunanithi dead

கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர்.

karunanithi dead

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

karunanithi dead

தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.