மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளியின் குடிநீர் தொட்டியில் ஆசிட் கலந்த விஷமிகள்; கரூரில் அதிர்ச்சி சம்பவம்.. மர்ம நபர்களுக்கு அதிகாரிகள் வலைவீச்சு.!
கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர், வீரன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில், பள்ளியின் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் ஆசிட், பினாயில் உட்பட கெமிக்கலை ஊற்றி இருக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தண்ணீரின் மாதிரியை சேகரித்தனர். குடிநீர் தொட்டியில் ஆசிட் கலந்தவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.