மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் தகராறு.. மச்சான் கழுத்தில் பீர் பாட்டிலால் சதக் விட்ட மாமன்.. பறிபோன உயிர்.!
குடும்ப பிரச்சனை காரணமாக மைத்துனரை பீர் பாட்டிலால் குத்தி கொன்ற அக்கா கணவர் சிவசூரியனை அதிகாரிகள் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குழித்தலை, கம்மநல்லூர் பகுதியை சார்ந்தவர் விஜய் (வயது 25). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இவரது அக்காவை, தொட்டியம் பகுதியை சார்ந்த சிவசூரியன் என்பவர் திருமணம் செய்துள்ளார்
சிவசூரியனுக்கும் - அவரது மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், நால்வரும் கம்மநல்லூரில் வசித்து வருகின்றனர். இதில், விஜய்க்கும் - சிவசூரியனுக்கும் இடையே தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று, விஜயும் - சிவசூரியனும் சேர்ந்து மதுபானம் அருந்தியுள்ளனர். பின்னர், வீட்டிற்கு புறப்பட்டு செல்லும் வழியில் குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற சிவசூரியன், பீர் பாட்டிலை உடைத்து விஜயின் கழுத்தில் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த லாலாபேட்டை காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து சிவசூரியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் விஜயின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.