மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாகன பட்டறையில் வேலைபார்த்த சிறுவன் உடல் நசுங்கி உயிரிழப்பு: கரூரில் சோகம்.!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் சக்திவேல். இவர் அங்குள்ள போதம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். குடும்ப வறுமையின் காரணமாக, அங்குள்ள வாகன பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று சிறுவன் டிராக்டர் ஒன்றை பழுதுபார்த்துக்கொண்டு இருந்தபோது, திடீரென டிராக்டர் இயங்கி மற்றொரு வாகனத்துடன் மோதி இருக்கிறது.
இந்த விபத்தில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் மரணம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாகன பட்டறை உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.