மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆள்நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரம்.. பிள்ளைகளுடன் விவசாய நிலத்திற்கு சென்ற பெண் விபரீத முடிவு..!
கணவர் உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட, வீட்டில் குழந்தைகளுடன் இருந்த தாய், குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, செம்பியநத்தம் கிராமம் பூசாரிப்பட்டி பகுதியை சார்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் டெய்லராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது 30). தம்பதிகள் இருவருக்கும் கனிஷ்கா என்ற 6 வயது மகளும், புதிஷா என்ற 3 வயது மகளும் உள்ளனர்.
நாச்சிமுத்துபாளையம் கிராமத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்காக சக்திவேல் நேற்று இரவு புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் சரண்யா மற்றும் 2 குழந்தைகள் இருந்துள்ளனர். நள்ளிரவு நேரத்தில் சரண்யா தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகளை எழுப்பியுள்ளார்.
கணவருக்கு சொந்தமாக உள்ள விவசாய கிணற்றுக்கு குழந்தைகளை அழைத்து சென்ற சரண்யா, குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்து, தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வயலுக்கு இரவுநேர காவலுக்கு சென்றவர்கள், எதற்ச்சையாக கிணற்றில் ஆட்கள் குதிப்பது போல இருப்பதை பார்த்துவிட்டு, திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சரண்யா மற்றும் கனிஷ்க்காவின் உடலை மீட்ட நிலையில், புதிஷாவின் உடலை தேட இயலவில்லை.
கிணறு 50 அடி ஆழத்தில் இருக்கும் நிலையில், 30 அடிக்கு மேல் நீர் இருந்துள்ளது. பின்னர், 2 மின்மோட்டார் வைத்து கிணற்று நீரினை வெளியேற்றி குழந்தை புதிஷா உடலை தேடும் பணிகள் நடைபெற்றது.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாலவிடுதி காவல் துறையினர், சரண்யா எத்தனை தற்கொலை செய்துகொண்டார்? என விசாரணை செய்து வருகின்றனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்துகையில், சமீப நாட்களாக சரண்யா மன இறுக்கத்துடன் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.