கல்குவாரியை இழுத்து மூடவைத்த சமூக ஆர்வலரான விவசாயி லாரி ஏற்றி துள்ளத்துடிக்க படுகொலை : கரூரில் பேரதிர்ச்சி சம்பவம்..! பரபரப்பு வீடியோ வைரல்.!!



karur-quarry-against-social-activist-killed

சட்டவிரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை இழுத்து மூட காரணமாக இருந்த விவசாயியான சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் கொசுவலை உற்பத்தி, ஆயத்த ஆடை உற்பத்தி, பேருந்து பாடி கட்டும் தொழில் பிரசித்தியானது ஆகும். புறநகர் பகுதிகளில் கல் குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில், சில குவாரிகள் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது. அங்குள்ள க.பரமத்தி பகுதியில் பல குவாரிகளுக்கு உரிமம் இல்லை. இந்த குவாரிகளில் இருந்து உற்பத்தியாகும் எம்.சாண்ட், ஜல்லிகள் உள்ளூர் மட்டுமல்லாது வெளிமாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. 

இந்நிலையில், க. பரமத்தி குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரின் மனைவி கார்த்திகா. இவரது பெயரில் குவாரி ஒண்டு செயல்பட்டு வந்த நிலையில், குவாரிக்கு அருகே சமூக ஆர்வலரான ஜெகானந்தன் (வயது 52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருக்கும் நிலையில், கடந்த 2019-ல் ஜெகநாதனை செல்வகுமார் கொலை சியா முயற்சித்துள்ளார். 

Karur

சமீபத்தில் செல்வகுமாரின் குவாரி உரிமம் காலக்கெடு நினைவுபெறவே, குவாரியை தொடர்ந்து செல்வகுமார் இயக்கி வந்துள்ளார். இதனை எதிர்த்து ஜெகநாதன் ஆட்சியர், கனிமவளத்துறை உட்பட பலருக்கும் புகார் அளித்துள்ளார். இதனால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு குவாரிக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், ஜெகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது லாரி மோதியுள்ளது. 

இவ்விபத்தில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், க. பரமத்தி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் லாரி செல்வகுமாருக்கு சொந்தமானது என்பது அம்பலமானது. விசாரணையை துரிதப்படுத்திய அதிகாரிகள் குவாரிக்கு எதிராக செயல்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் ஜெகநாதன் செல்வகுமாரின் தூண்டுதலால் லாரி ஓட்டுநர் சக்திவேல் மூலமாக கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் சிறையில் அடைத்தனர். 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.