53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பெண்கள் மோசடி மன்னன் காசிக்கே டஃப் கொடுத்த அவரது நண்பன்! அடுக்கடுக்காக வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி. 26 வயது நிறைந்த இவர் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்ட நிலையில், சென்னையை சேர்ந்த பெண்மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து இவர் மீது கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ என அடுக்கடுக்காக ஏராளமான புகார்கள் எழ துவங்கியது.
அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய அவரது நண்பரான 19 வயது நிறைந்த ஜினோ என்பவரை கைது செய்தனர். மேலும் வெளிநாட்டில் இருக்கும் அவரது நண்பன் கௌதம் என்பவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்ற நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் காசியின் நண்பரான கணேசபுரத்தைச் சேர்ந்த 26 வயது நிறைந்த தினேஷ் என்பவருக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவரிடம் காசி தான் கழற்றிவிட நினைக்கும் பெண்களின் எண்களை கொடுப்பார்.
அதனைத் தொடர்ந்து அந்த பெண்களை தினேஷ் தனியாக சந்தித்து காசி குறித்து இல்லாததும் பொல்லாததுமாக பல கதைகளை கிளப்பி அவர்களை காசியிடமிருந்து விலக்குவார். பின்னர் அந்த பெண்களுக்கு ஆறுதல் சொல்வது போன்று அவர்களிடம் நெருங்கி பழகி, அவர்களை சீரழிப்பார்.
பின்னர் காசியைப் போன்று அந்த பெண்களுக்கு தெரியாமல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை வைத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறித்தும் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.