பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
அவமானத்தால் வருமானம் வந்தது.. என்னோட ஒருமுகத்தை தான் பார்த்திருக்கீங்க - மனம்திறந்து பேசிய காத்து கருப்பு கலை.!

டிக் டாக் செயலியால் தமிழ் மக்களிடையே அறிமுகமான பலரும், அதன் தடைக்கு பின்னர் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் என வெவ்வேறு சமூக வலைத்தளங்களில் கணக்குகளை தொடங்கி பின்தொடர்பாளர்களை வைத்து வருமானம் பார்க்க தொடங்கினர். இவர்கள் விடீயோவின் பார்வையாளர்களை அதிகரிக்க தங்களுக்கு தெரிந்த வழிகளில் அதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.
அவை மக்களின் முகம் சுளிக்கும் வகையில், எதற்காக இப்படி நடிக்கிறார்கள்? என கண்டிக்கும் வகையிலேயே இருந்தன. இந்த விஷயம் தொடர்பாக தற்போது காத்து கருப்பு கலை மனம்திறந்து பேசியுள்ளார். தனது வாழ்க்கை குறித்து குட்டி கதையாக நிகழ்ச்சி மேடையில் பேசிய காத்து கருப்பு கலை, "எனது அம்மா 2 நாட்களுக்கு முன்பு போனில் தொடர்பு கொண்டு மளிகைக்கடைக்கு ரூ.2000 கொடுக்க வேண்டும் என கேட்டார்.
நான் எனது அம்மாவின் நம்பரை பிளாக்கில் போட்டுவிட்டேன். எனது நிலைமை இது. விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் தான் வந்தேன். என்னிடம் கார் இருந்தாலும், பெட்ரோல் செலவு ஆகிறது என பேருந்திலேயே வந்துவிட்டேன். சென்னை வடபழனி ஏ.வி.எம் அலுவலகத்திற்கு எதிரில் உள்ள விடுதியில் அறையெடுத்து தங்கினேன். அங்கு பக்கத்து அறையில் ஒருவர் இருந்தார். தண்ணீர் குடிக்க சென்ற இடத்தில் என்னை நான் ஒரு Celebrity என அறிமுகம் செய்தேன்.
அவர் நானும் Celebrity என கூறினார். அவரிடம் விசாரித்தபோது சன், விஜய் போன்ற பல தொலைக்காட்சியில் பணியாற்றுவதாக தெரிவித்தார். என்னை அவர் கேட்டபோது, நான் ஒரே டிவியில் தான் போயிருக்கிறேன். பாலிமர் தொலைக்காட்சியில் செய்தியாக வந்துள்ளேன் என கூறினேன். பாலிமரில் நியூஸ் வந்தது தான் இன்று இங்கு வந்து நிற்க காரணம்.
எனது யூடுப் சேனல் அப்படி. எனது திறமையை கொண்டு வரும் முயற்சியில் நான் தோற்றுப்போய்விட்டேன். மக்கள் நினைத்ததை கொடுத்தேன். பலருக்கும் என்னை தெரிந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். எனக்குள்ளும் திறமை இருக்கிறது. அதனை காண்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. படத்தின் முதல் பாதியை மட்டுமே அவர்கள் பார்த்துள்ளார்கள்.
இப்போது இடைவேளை நிலையில் இருக்கிறார்கள். இன்றளவில் என்னை பலரும் காணவில்லை என கேட்கிறார்கள். படத்தின் பிற்பகுதி இனிதான் இருக்கிறது. அப்போது ஓய்வு இருக்காது. நாம் அவமானப்பட்டால் தான் வருமானம் வரும். முதலில் எனக்கு அவமானம் வந்தது, பின்னர் வருமானம் வந்தது. வாழ்க்கையில் எவ்வுளவு கஷ்டம் அடைய்ந்தாலும், பிறர் எதை கூறினாலும் கண்டுகொள்ளாமல் உங்களின் இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள்.
நான் பேருந்தில் வரும்போது கூட தாம்பரம் வந்துவிட்டது என கூறினார்கள். நான் காதில் வாங்காமல் சென்றுவிட்டு, மீண்டும் தாம்பரம் வந்தேன். அப்படியும் இருக்க கூடாது. எதையும் கேட்க கூடாது என இருக்கக்கூடாது. எதை கேட்க வேண்டுமோ அதை கேட்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டுமோ, அதனை தவிர்க்க வேண்டும்" என பேசினார்.
Video Thanks: Kalakkal Cinema
#KathuKaruppuKalai