#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுநீரகம் பாதித்த சிறுவன் நடுக்கடலில் கைது .....! விடுவிக்க கூறி சிறுவனின் தாய் கதறல்....
அந்தோணி ராயப்பன் என்பவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மகன் ஒருவர் உள்ளார். இவர் சிறுநீரகக் கோளாறு நோயினால் பாதிக்கப்பட்ட பள்ளிப் பருவத்து மாணவன். இவர்களது வாழ்வாதாரமே மீன்பிடி தொழில் செய்வது தான். இவரது குடும்பம் இவர் செய்யும் தொழிலை நம்பியே உள்ளது.
பள்ளி விடுமுறை நாள் என்பதால் தனது தந்தை அந்தோணி ராயப்பனுடன் சேர்ந்து அவரது மகன் உட்பட 15 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்கள் திரும்பி வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர் அந்தோணி ராயப்பன் அவரது மகன் உட்பட 15 பேரையும் இலங்கை கடற்படையினர் படகுடன் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன அந்தோணி ராயப்பனின் மனைவி சிறுநீரகம் பாதிப்புக்கு உள்ளான தனது மகன் தினமும் மருந்து சாப்பிட்டு வருவதாகவும் அவனை உடனே மீட்டு தரக்கூறி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் இந்த கைது நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக அந்த மீனவ குடும்பங்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.