மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அனைத்து பெண்களுக்கும், ₹.1000 உதவித்தொகை கிடைக்கும்.! அமைச்சர் அறிவிப்பு.!
அனைத்து மகளிருக்கும் ₹.1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் பெண்களில் தகுதி உள்ளவர்களுக்கு தமிழக அரசால் ₹.1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில், தகுதி பெறாத பெண்கள் பலரும் அரசிடம் மீண்டும், மீண்டும் தங்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேருவிடம்," அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, இப்பொழுது தகுதி பார்த்து அவர்களுக்கு கொடுக்கிறீர்களே.?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு," தமிழகத்தின் நிதி வருவாய் அதிகரிக்கும் போது அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்."என்று தெரிவித்துள்ளார்.