மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ShockingVideo: திருநங்கைகளை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கொடுமை செய்த 2 இளைஞர்கள்.. அரிவாளை காண்பித்து பகிரங்க மிரட்டல்..!
ஊரை விட்டு வெளியேறும்படி 2 திருநங்கைகளை இளைஞர்கள் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று தாக்கிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, கழுகுமலை துலுக்கர்பட்டியில் வசித்து வருபவர் மகேஷ். தென்காசி மாவட்டம் கே. ஆலங்குளத்தை சேர்ந்தவர் அனன்யா. இருவரும் திருநங்கைகள் & தோழிகள். கடந்த 7ம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் துலுக்கர்பட்டியில் இருந்து கொச்சிலாபுரம் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில், கழுகுமலை ஆறுமுகம் நகரில் வசித்து வரும் நோவாபூபன், சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் திருநங்கைகளை வழிமறித்து அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர். இருவரையும் அங்கு தாக்கிய கொடூரர்கள், அனன்யாவின் தலைமுடியை அறுத்து இருக்கின்றனர். இதனை விடியோவாக எடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவமனைக்கு அரிவாளுடன் வந்த விஜய் மற்றும் நோவாபூபன் ஆகியோர் திருநங்கைகளை ஊரில் இருக்கக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் திருநங்கைகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதற்கிடையில், திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, விஷயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை சென்றுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விஜய் மற்றும் நோவாபூபனின் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
Couple of trans women attacked by this goons @tnpoliceoffl @CityTirunelveli @TUTICORINPOLICE @sivagangapolice @mducollector @maduraipolice .Break your silence pic.twitter.com/HHwGuTJtI2
— GRACE BANU (@thirunangai) October 12, 2022