பிரியாணி சாப்பிடணும்... படம் பாக்கணும்... அக்காவிடம் செயின் அடித்தோம்.... அதிர்ச்சியில் காவல்துறை.!



kovilpatti-chain-snatching-accused-statement-shocks-pol

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக  செயின் பறிப்பு போன்ற திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் போட்டி தேர்வு மையத்திற்கு சென்று விட்டு கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம்  வந்த இளம் பெண்ணிடமிருந்து இரண்டு சிறுவர்கள் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சேர்ந்தவர்  சுப்புராஜ் இவரது மகள் அர்ச்சனா. இவர் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக கோவில்பட்டியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக தினமும் கழுகுமலையிலிருந்து கோவில்பட்டிக்கு பேருந்து மூலம் சென்று வந்துள்ளார்.

tamilnadu

சம்பவம் நடந்த தினத்தன்று தனது பயிற்சியை முடித்துவிட்டு  செண்பகவல்லி அம்மன் தெருவில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார் அர்ச்சனா. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சிறுவர்கள் இவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இதனால் அவர் திருடன் திருடன் என கத்தினார். அப்போது அருகில் இருந்தவர்கள் இரண்டு பேரை பிடிக்கு முயன்றும் பிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார் அர்ச்சனா.

அவரது புகாரியின் அடிப்படையில்  செண்பகவல்லி அம்மன் கோவில் தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களும் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து காவல்துறை விசாரித்தது . அப்போது பெரிய ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஏதாவது படம் பார்க்க வேண்டும். அதற்கு கையில் காசு இல்லாததால்   செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக சிறுவர்கள்  வாக்குமூலம்  அளித்துள்ளனர். இதனை கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.