மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரி மாணவியின் கிராமத்திற்குள் புகுந்து., ஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் தாக்குதல்.. சம்பவம் செய்த கிராம மக்கள்..!
காதல் பெயரில் கல்லூரி மாணவிக்கு தொல்லை தந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர், சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதே கல்லூரியில், காவேரிப்பட்டினம் பகுதியை சேர்ந்த சர்க்கரை என்பவரின் மகன் விஜய் படித்து வருகிறார்.
விஜய் சக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவியை ஒருதலையாக காதலிக்கிறேன் என கூறி தொல்லை கொடுத்து வந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த மாணவியை நேரில் சந்தித்து வாக்குவாதம் நடந்துள்ளது.
மேலும், மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்த காரணத்தால், தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இதுபோதாது என விஜய் தனது நண்பர்கள் 10 பேருடன் சக்கம்பட்டி கிராமத்திற்கு சென்று ரகளை செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த கிராமத்தினர் ஒன்றுதிரண்டு இளைஞர்களை கயிற்றால் கட்டிவைத்து ஊத்தங்கரை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணைக்குப்பின், விஜய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.