திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நீதிமன்றத்திற்கு சாட்சி அளிக்க சென்ற காவலர் விபத்தில் மரணம்; முந்திச்செல்ல முயன்ற வாகன ஓட்டிகளால் பரிதாபம்.!
குற்ற வழக்கு விவகாரத்தில் சாட்சி அளிக்க சென்ற காவலர் விபத்தில் பலியாகினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வசித்து வருபவர் கணேசன் (வயது 58). இவர் மத்தகிரி காவல் நிலையத்தில் போலீஸ் எட்டாக வேலைபார்த்து வருகிறார். நேற்று கெலமங்கலம் காவல் நிலைய குற்றவழக்கு தொடர்பாக, தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்திற்கு சாட்சி அளிக்க வேண்டி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துவிட்டு ஓசூருக்கு சென்றுகொண்டு இருந்தார்.
அங்குள்ள கெலமங்கலம் பாரந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே செல்கையில், பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் கணேசனை முந்திச்செல்ல முற்பட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில், ஏட்டு கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த கெலமங்கலம் காவல் துறையினர், கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ராயக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.