திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சாதிவிட்டு சாதி திருமணம்.. மகன், தாயை வெட்டிக்கொன்ற தந்தை; மருமகள் கவலைக்கிடம்.. கிருஷ்ணகிரியில் மீண்டும் பயங்கரம்.!
கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் ஒரே சமுதாயத்திற்குள் காதல் திருமணம் செய்த விவகாரத்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் வெவ்வேறு சமூக காதல் எதிர்ப்பில் இளைஞரின் தந்தையால் 2 கொலை செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை அருணபதி கிராமத்தில் வசித்து வருபவர் தண்டபாணி. இவரின் மகன் சுபாஷ். இவர்கள் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். சுபாஷ் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுஷா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் என்பதால் தண்டபாணி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சுபாஷ் அனுஷாவை கரம்பிடித்துள்ளார். இந்த நிலையில் சுபாஷ் தனது காதல் மனைவி அனுஷாவுடன் கிராமத்தில் உள்ள பாட்டி கண்ணம்மாவின் வீட்டிற்கு வந்துள்ளார்.
கண்ணம்மா தண்டபாணியன் தாயார் ஆவார். இந்த தகவலறிந்து வந்த தண்டபாணி சுபாஷ், அனுஷா இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய நிலையில், தடுக்க சென்ற தாய் கண்ணம்மாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் சுபாஷ் மற்றும் கண்ணம்மா இருவரும் நிகழ்வு இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அனுஷா தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.