திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பஞ்ச் டயலாக் பேசிய 19 வயது இளம் ரௌடியை பதறவைத்த போலீஸ்.. கவனிப்புக்கு பின் கதறலோ கதறல்.!
தன்னை தௌலத்தாக கருதி செல்போனில் கம்பு சுற்றியவருக்கு கிடைத்த பெருமித வெகுமதி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையபேட்டை, மேலதெருவில் வசித்து வருபவர் அசோக் (வயது 19). இவரின் மீது கிருஷ்ணகிரி, மகாராஜா கடை உட்பட பல காவல் நிலையங்களில் வழக்குகள் இருக்கின்றன.
கடந்த 11ம் தேதி பழையபேட்டை லலட்சுமி நாராயணன் கோவில் பகுதியில் சென்ற வினோத் குமாரை (வயது 24) அசோக் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கி இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக வினோத் குமார் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், அசோக் கஞ்சா புகைத்து நானும் ரௌடி என காவல் துறையினரை மிரட்டி வீடியோ வெளியிட்டார்.
அதுமட்டுமல்லாது அரசு பேருந்தை கொளுத்திவிடுவேன் எனவும் தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ குறித்த விபரம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆணையர் கவனத்திற்கு செல்லவே, உடனடியாக அசோக்கை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.
இதனையடுத்து, கிருஷ்ணகிரி காவல் துறையினர் அசோக்கை கைது செய்து சிறப்பாக கவனித்ததை தொடர்ந்து, அவர் இனிமேல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியிடமாட்டேன் என கூறி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.