#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஓட்டு கேட்டு போன இடத்தில நம்ம குஸ்பு என்ன செஞ்சிருக்காங்க பாருங்க.. வைரலாகும் புகைப்படம்..
ஓட்டு கேட்டு சென்ற நடிகை குஸ்பு வாக்காளர் ஒருவரின் வீட்டிற்கே சென்று டீ போட்டுக்கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகை குஸ்பு அதிமுக - பாஜக சார்பாக ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். திமுகவின் கோட்டை என்று கூறப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஸ்பு தினமும் மக்களை சந்தித்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுவருகிறார்.
நேற்று தனது கணவர் சுந்தர். சி அவர்களுடன் சென்று குஸ்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக குஷ்பு இன்று குலாம் அபாஸ் அலிகான் பகுதியில் தீவர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குஸ்புவை தம்பதியினர் ஒருவர் தங்கள் வீட்டிற்கு தேநீர் அருந்த வருமாறு அழைத்தனர்.
அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட குஸ்பு, அவர்கள் வீட்டின் சமையலறை வரை சென்று, தானே டீ தயாரித்து அங்கிருந்தவர்களுக்கு குஸ்பு இன்முகத்துடன் வழங்கினார். வாக்கு சேகரிக்க வந்த குஸ்பு தங்கள் வீட்டில் டீ போட்டு கொடுத்ததை பார்த்த அந்த குடும்பத்தினர் உட்ப்பட்ட, அந்த பகுதி மக்கள் முழுவதும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.