மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சி அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு... காவல் துறை தீவிர விசாரணை.!
மணப்பாறை அருகே தொழிலாளி மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குபேரன் என்பவர் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள பொன்னம்பலம் பட்டியில் எல் இறக்குவதற்காக சென்று இருக்கிறார்.
இந்நிலையில் குடோனிலிருந்து வெளியே சென்ற குபேரன் நீண்ட நேரமாகியும் குடோனுக்கு திரும்பாததால் அவரது நண்பர் வெளியே சென்று பார்த்து இருக்கிறார். அப்போது மயங்கிய நிலையில் கிடந்த குபேரனை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.