திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முழுமையாக பிங்க் பெயிண்ட் அடிக்கப்படும் மகளிர் பேருந்துகள்.! போக்குவரத்து துறை தீவிரம்.!
மகளிருக்கான பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் பெயிண்ட் அடிக்கின்ற பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் சாதாரண வெள்ளை நிற போர்டு வைத்த அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் மகளிர் பயணிக்கும் முறை இருந்து வருகிறது. ஆனால் இந்த பேருந்துகளின் வித்தியாசம் தெரியாமல் அவசரத்தில் சில பெண்கள் சொகுசு மற்றும் டீலக்ஸ் பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.
எனவே இந்த குழப்பத்தை போக்குகின்ற வகையில் இலவசமாக பெண்கள் பயணிக்கின்ற பேருந்துகளை பிங்க் நிறத்தில் மாற்றுகின்ற நடவடிக்கையை போக்குவரத்துத்துறை மேற்கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் பிங்க் நிற பேருந்துகள் சிலவற்றை மெரினா கடற்கரையில் வைத்து நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இத்தகைய நிலையில், மகளிருக்கான இலவச பேருந்துகளை முழுவதும் பிங்க் நிறத்தில் மாற்றுகின்ற நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தீவிரப்படுத்துகிறது.
பேருந்தின் இரண்டு பக்கங்களிலும் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில் அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது முழுமையாக பெயிண்ட் அடிக்கிற பணியில் போக்குவரத்து துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.