நீலகிரியில் விடாது பெய்த மழையால் சாலையில் மண் சரிவு..!



Landslide on road due to incessant rain in Nilgiris..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. அதேபோன்று நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த அதிக கனமழையின் காரணமாக கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் 6 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த மண் சரிவானது கரிக்கையூர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலையை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாலையில் மண் சரிவால் ஏற்பட்டுள்ள மண் கற்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த நிலச்சரிவில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாலைகளில் வாகனத்தில் செல்லும்போது மக்கள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.