#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லிப்ட் கேட்டு கைவரிசை காட்டிய மர்ம நபர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சக்தி பாலன். இவர் நேற்று முன்தினம் மாருதி 800 காரில் மூலனூரை அடுத்த ஒத்த மாந்துறை பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மரபு நபர் ஒருவர் லிப்ட் கேட்டு காரில் ஏறியுள்ளார்.
காரில் ஏறிய பிறகு அந்த மர்ம நபர் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு காரை ஓட்டி சென்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் குற்றவாளி திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டியை சேர்ந்த காளியப்பன் மகன் ரவி என்பது தெரியவந்தது. பல இடங்களில் கைவரிசை காட்டி அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ரவியை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.