வழக்கத்துக்கு அதிகமாக விற்பனையான மது பாட்டில்கள்... டாஸ்மார்க் கடைகளில் நேற்றே முற்றுகையிட்ட மறுபரியர்கள்..!!



Liquor bottles sold more than usual... Tasmark shops were besieged yesterday by thugs..

இன்று மதுபான கடைகள் இயங்காது என்பதால் மதுகுடிப்போர், தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்க நேற்று மாலை கடைகள் முன்பு குவிந்தனர்.

டாஸ்மாக் கடைகளில் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் கோடிகளில் வருமானம் குவியும். பண்டிகை நாட்களில் மதுப்பிரியர்கள் மதுபானங்களுடன் பண்டிகையை கொண்டாட அதிக அளவில் மதுபானங்களை வாங்கிச் செல்வர். பொங்கல் பண்டிகை என்பதால் தற்போது டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. 

இதனிடையே திருவள்ளுவர் தின நாளில், டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதுபான கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்களில் மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் மதுபான கடைகள் செயல்படாது என்பதால் மதுகுடிப்போர், நேற்று மாலையே தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்க கடைகள் முன்பு குவிந்தனர். பொங்கல் விடுமுறையை கொண்டாட மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

சிலர் கள்ளச்சந்தையில் மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக  மதுகுடிப்போர் குற்றம்சாட்டுகின்றனர். குடிமகன்கள், போட்டிபோட்டுக் கொண்டு மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதால், வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை அதிகரித்திருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.