மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீடியோ: நேரா ஒரே மோது.. அப்படியே கவிழ்ந்த அரசு பேருந்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி இதோ..
கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்த விபத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகிவருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் அரசு பேருந்து ஒன்று இன்று காலை சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்து ஆலங்கொம்பு அருகே சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக கிளை சாலையில் இருந்து வெளியே திரும்ப முயன்ற சரக்கு லாரி நேராக அரசு பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து விபத்தி சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.
ப்ரேக் செயலிழந்த லாரி.. வளைவில் வேகமாக வந்து அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!#Coimbatore | #Bus | #Lorry | #Accident | #CCTV pic.twitter.com/zMBeNn5oEt
— Polimer News (@polimernews) December 27, 2021