53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
தமிழக அரசு பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி; 30 பேர் படுகாயம்.!
லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி கிராமத்தில், இன்று அரசு பேருந்து - லாரி எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தை சந்தித்தன.
இந்த விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.