35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
கன்னட நடிகன் சாவுக்கு போக நேரமிருக்கும் ரஜினிக்கு, புயலால் பாதிப்படைந்த அப்பாவி தமிழர்களை பார்க்க மட்டும் நேரமில்லை!. வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலமாக நடிகர் ரஜினிகாந்த் வழங்கியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சினிமாபிரபலங்கள் நிவாரண உதவி செய்ததுமட்டுமின்றி இன்று வரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நிவாரண பொருட்களை மட்டும் வழங்கிய ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்கவில்லை. இதனால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வெளியாகின.
ஆனால், இது தவறான செய்தி என்றும் அவர் நலமாக இருக்கிறார் என மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது நெருங்கிய நண்பரும், கன்னட நடிகருமான அம்பரீஷின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கர்நாடகா சென்றுள்ளார் ரஜினிகாந்த்.
இந்த புகைப்படத்தை வெளியிட்டு, கன்னட நடிகன் சாவுக்கு போக நேரமிருக்கும் ரஜினிக்கு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களை பார்க்க மட்டும் நேரமில்லை. ஆனால், நேரடியா முதலமைச்சர் ஆகவேண்டும் என ஆசை மட்டும் உள்ளது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.