#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலியை மிரட்டி அடிக்கடி உல்லாசம்.. இளம்பெண் போலீசில் புகார்.!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி வந்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், வீடியோ காலில் பேசியபோது அந்த பெண்ணின் ஆடைகள் அனைத்தையும் கழட்ட சொல்லி பேசியுள்ளார். இதில் அந்தப் பெண் நிர்வாணமாக பேசுவதை, அவருக்கே தெரியாமல் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த வீடியோவை வைத்து மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். நாளுக்கு நாள் அவரது டார்ச்சர் அதிகரிக்கவே, மன வேதனையில் இருந்த அந்தப் பெண் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்த அண்ணன் மற்றும் உறவினர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பின் மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.