திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை! கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழா!
அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினத்தையொட்டி பதமிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டரின் அவதார தின விழா, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான மாசி 20ஆம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினத்தையொட்டி அதிகாலை 3 மணி முதல் அய்யா வைகுண்டருக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல் உள்ளிட்ட பணிவிடைகள் நடைபெற்றன.
இந்தநிலையில் அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அந்த மூன்று மாவட்டங்களிலும் இன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் அதேபோல் விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஏப்ரல் 25 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.