தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
விஞ்ஞானி சிவனை மறந்த முதலமைச்சர் ஸ்டாலின்?! சமூகவலைத்தளத்தில் எழும் கண்டனம்!!
சந்திராயன் மூன்று விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்தது இதனால் உலக நாடுகள் அனைத்தும் வியந்து பார்க்கும் அளவிற்கு இந்தியா பெருமை அடைந்துள்ளது மேலும் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடாக இந்தியா விளங்குகிறது இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவரது பாராட்டுகளை தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில்:-
"சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. தமிழகத்திற்கு ஒரு மகத்தான சாதனை உணர்வைக் கொண்டுவருகிறது. மயில்சாமி அண்ணாதுரை, எம் வனிதா மற்றும் இப்போது பி வீரமுத்துவேல் ஆகிய மூன்று #சந்திராயன் பயணங்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விதிவிலக்கான சிந்தனையாளர்களால் வழிநடத்தப்பட்டுள்ளன. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.
#தமிழ்நாட்டின் இளம் திறமையாளர்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நமது #இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தில் பங்களிக்குமாறு நான் ஊக்குவிக்கிறேன்!"
என்று அதில் பதிவிட்டிருந்தார். ஆனால் இஸ்ரோவில் பணியாற்றிய மிக முக்கியமான நபரான மேலும் சந்திராயன் 2 ப்ராஜெக்டில் சந்திராயன் உருவ அமைக்கப்பட மிக முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானி சிவனை குறிப்பிடாமல் இருந்த இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் முக்கியமான பங்கு வகித்த சிவனை ஏன் குறிப்பிடவில்லை? சிவனை மறக்க என்ன கரணம்? என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.