மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரான்சில் இந்திய பிரதமருடன் மாதவன்..! மகிழ்ச்சியுடன் பதிவிட்ட புகைப்படம்..!!
இந்திய பிரதமர் மோடி 13 மற்றும் 14ஆம் தேதி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு அங்கு சிறப்பு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இரவு விருந்துக்காக பிரான்சில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டனர்.
இந்த விருந்தில் இந்திய உணவுகள் மற்றும் பிரான்ச் உணவுகள் பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் மற்றும் இந்திய பிரதமர் உணவருந்தி கொண்டிருக்கும்போது அங்கு மாதவன் சென்றுள்ளார்.
பின்னர் இருவர்களுடனும் செல்பி எடுக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை தெரிவித்த உடனே அனுமதித்த இமானுவேல் மேக்கரன், அவரே மாதவனின் போனை வாங்கி செல்பி எடுத்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேக்கரான் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மாதவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.