டாஸ்மாக் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றா?.. மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிரடி கேள்வி.!



Madhurai court questioned tasmac is essential?

மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளின் பதிலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக கேள்வி எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பி. வாகைக்குளம் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றக்கூறி பொதுமக்கள் சார்பில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், எங்களது கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 

முன்னதாக மற்றொரு கிராமத்தில் இருந்த அகற்றப்பட்டு அரசு மதுபானக்கடை வாகைக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. எங்களது கிராமத்தை சுற்றிலுள்ள 4 ஊர்களுக்கு எங்களது கிராமமே பிரதானமானது. இங்கு மதுபானக்கடை அமைப்பது சரியானது அல்ல. இது இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamilnadu news

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் சுப்பிரமணியம், புகழேந்தி அமர்வில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கையில், "20 கி.மீ தூரத்திற்கு ஒருமுறை மதுபான கடை உள்ளது" என பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

இதனைக்கேட்டு கொதித்துப்போன நீதிபதிகள், 20 கி.மீ தூரத்திற்கு ஒரு கடை உள்ளது என்று கூற பொதுமக்களுக்கு டாஸ்மாக் அத்தியாவசியமான ஒன்றா? என்ற கேள்வியை முன்வைத்து, டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.