திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சட்டவிரோத கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புக்கு சாட்டையடி எச்சரிக்கை: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி.;
மதுரை மாவட்டத்தில் உள்ள விளாங்குடி பகுதியில் சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், "அனுமதி இல்லாத கட்டுமானத்தால் மக்கள் நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான விஷயங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நீதிமன்றம் அவ்வாறு இருக்காது. முறையில்லாத கட்டிடத்தால் சென்னை போன்ற நிலை மதுரை மக்களுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டவிரோத செயல்களுக்கு உறுதுணையாக இருந்து துணைபோகும் அதிகாரிகளுக்கு துறைரீதியான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.