மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்வீச்சு, கலவரம் என புகார்.. குவிக்கப்பட்ட காவல் துறையினருக்கு பேரதிர்ச்சி.. ஒத்த கல்லு கூட கிடைக்கலையாம்.!
ஆனந்த் நகரில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் கலவரம் ஏற்பட்டுள்ளது என காவல் துறையினரை தொடர்பு கொண்டு கிராம மக்கள் புகார் அளித்த நிலையில், கல்வீச்சில் ஒரு கற்கள் கூட சிக்காத காரணத்தால் அதிகாரிகள் கொந்தளித்து போனில் தொடர்பு கொண்டோரை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கார்கோன் மாவட்டம், ஆனந்த் நகரில் இருந்து காவல் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மக்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, ஆனந்த் நகரில் இருதரப்பு மோதல் நடைபெறுகிறது. இரண்டு குழுவும் கற்களை வீசி தாக்குதல் நடத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிகழ்விடத்தில் கலவரம் நடைபெறுகிறது என்று உணர்ந்த அதிகாரிகள், கூடுதல் காவல் துறையினருடன் ஆனந்த் நகர் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். நிகழ்விடத்தில் ஆய்வு செய்கையில் காவல் துறையினருக்கு பேரதிர்ச்சியாக சம்பவம் காத்திருந்துள்ளது. அதாவது, கலவரம் நடந்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை.
கல்வீசி தாக்குதல் நடத்தியிருந்தால் ஏராளமான கற்களாவது கிடைத்திருக்கும் என்ற நிலையில், ஒரு கற்கள் கூட கண்களில் தென்படவில்லை. மேலும், கலவரம் என்று காவல் துறையினருக்கு 100 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதனால் நடக்காத சம்பவத்தை நடந்ததாக கூறி காவல் துறையினரை உள்ளூர் மக்கள் அலைக்கழிக்கவே, அதிகாரிகள் 44 முதல் தகவல் அறிக்கை பதிந்து, 148 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்த தொடர் விசாரணை நடந்து வருகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், இந்து மதத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மீது கொலைவெறித்தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஈடுபட்ட 148 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பதற்றத்தை குறைக்கும் பொருட்டு அதிகாரிகள் உண்மை நிலவரத்தை தெரிவிக்கவில்லை என்பதைப்போல கூறுகின்றனர்.