மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாக்குக்கு பதில் சிறுநீரகத்தில் அறுவை சிகிச்சை செய்தோமா?.. மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் அதிரடி விளக்கம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், கே.கே. நகர் காலனியில் வசித்து வருபவர் அஜித் குமார் (வயது 23). இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். அஜித் குமாரின் மனைவி கார்த்திகா. தம்பதிகளுக்கு கவின் என்ற ஒரு வயதுடைய குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டில் குழந்தை கவினுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பின்னர், மறுபரிசோதனைக்கு தம்பதிகள் கடந்த 21ம் தேதி மதுரைக்கு சென்ற நிலையில், மருத்துவர்கள் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதில் சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தந்தை அஜித் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில், மேற்கூறிய விஷயம் தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் பேசுகையில், "குழந்தைக்கு வாய்க்குள் நாக்கு ஒட்டி இருந்துள்ளது. கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய குழ்ந்தை அனுமதிக்கப்பட்ட போது, குழந்தையின் சிறுநீர்ப்பை விரிவடைந்து இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டது.
அப்போது நடந்த பரிசோதனையில் குழந்தைக்கு சிறுநீரக பகுதியில் முன்தோல் குறுக்கம் இருப்பது உறுதியானது. இதனால் குழந்தைக்கு நாக்கு மற்றும் சிறுநீரக பகுதியில் என 2 அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தை தற்போது நலமுடன் இருக்கிறார். சிறுநீர் கழிக்கிறார். தற்போது குழந்தைக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டிருந்தாள், எதிர்காலத்தில் கட்டாயம் செய்திருக்கவேண்டிய நிலை இருந்திருக்கும்" என்று தெரிவித்தார்.