மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ISIS ஆதரவு இயக்கத்திற்கு ஆட்கள் சேர்ந்த 2 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.. என்.ஐ.ஏ அதிரடி.!
மதுரையில் வசித்து வந்த 2 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு பெற்ற ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று என்.ஐ.ஏ அவர்களை கைது செய்தது. இவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை சேர்ந்த பாவா பஹ்ருதீன் என்ற மன்னை பாவா (வயது 41) மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை சேர்ந்த ஜியாவுதீன் பாகவி (வயது 40) ஆகிய இருவர் கடந்த 2020 ஆம் வருடம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி, கடந்த 2021 மே 28 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், இவர்களுக்கு ISIS ஆதரவு பெற்ற இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும், இந்திய அரசுக்கு எதிராக இஸ்லாமிய அரசை நிறுவும் தகி அல்-தின் அல்-நபானி அமைப்பை சேர்ந்தவரின் துணையுடன், அந்த அமைப்புக்கு இந்திய முஸ்லீம்களை மூளைச்சலவை செய்து ஆட்கள் சேர்க்கும் நபராகவும் பாவா பஹ்ருதீன் மற்றும் ஜியாவுதீன் பணியாற்றியுள்ளனர்.
இவர்களின் மீது நேற்று மீண்டும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.