திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பூட்டிய வீட்டில் சடலமாக 8 வயது சிறுமி; தலைமறைவான தந்தை.. நடந்தது என்ன?.. மதுரையில் பயங்கரம்.!
தாழிட்டு பூட்டிக்கிடந்த வீட்டில் 8 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தந்தைக்கு வலைவீசப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரின் மனைவி பிரியதர்ஷினி. தம்பதிகளுக்கு 8 வயதுடைய தர்ஷினி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது.
நேற்று இவர்களின் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, தம்பதியின் மகள் தர்ஷினி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், காளிதாஸை தேடி வருகின்றனர். விசாரணை நடந்து வருகிறது.