திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சச்சோ.. நாளை மதுரையில் இந்த பகுதிகளுக்கெல்லாம் மின்தடை.. தயாராக இருங்கள் மக்களே...!
தமிழ்நாடு மின்வாரிய கழகத்தின் சார்பில் ஒவ்வொரு இடத்திற்கும் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு மின்விநியோகம் சீராக கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும், அதில் உள்ள பழுதுகளை நீக்கி மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் மாதம் ஒருமுறை மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில், மதுரை அரசரடி, கப்பலூர் துணை மின்நிலையத்தில் இருக்கும் இண்டஸ்ட்ரியல், நிலையூர் உயர்மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால் அக்.12-ம் தேதியான நாளை காலை 10 மணிமுதல் மாலை 2 மணிவரையில் சொக்கலிங்கம் நகர் தெரு 1 முதல் 9 வரை, டி.எஸ்.பி நகர், பொன்மேனி மெயின் ரோடு, எஸ்.எஸ்.காலனி வடக்குவாசல்,
பிள்ளையார் கோவில் தெரு, பொன்மேனி நாராயணன் தெரு, ஜானகி நாராயணன் தெரு, அருணாச்சலம் தெரு, திருவள்ளுவர் தெரு, வால்மீகி தெரு, சோலைமலை தியேட்டர் பின்புறம், மீனாட்சி நகர், ராமையா தெரு, பொன்பாண்டி தெரு, குடியானவர் கிழக்கு தெரு, குமரன் தெரு, ஜவஹர் மெயின் ரோடு 5 தெருக்கள்,
கண்ணதாசன் தெரு, சுப்பிரமணியர் தெரு, நாவலர் தெருக்கள் 3, பைபாஸ் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, சௌபாக்யா நகர், துர்கா நகர், லைன் சிட்டி, எஸ்.ஆர்.வி நகர், அமைதிச்சோலை, சுந்தர் நகர், ஜெ.ஜெ. நகர், ஹார்விபட்டி பகுதியில் நாளைய தினத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்படும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் சீர்செய்யப்படும்.