திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளக்காதல் மோகத்தால் பயங்கரம்; கணவனை கழுத்தை நெரித்துக்கொன்ற பெண்..!
மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி, வில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். கடந்த வாரம் மர்மமான முறையில் இவர் வீட்டில் உயிரிழந்தார்.
இவரின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தினர்.
விசாரணையில், குருநாதனின் மனைவி மகாலட்சுமிக்கு, அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இதனை அறிந்த குருநாதன், தனது மனைவியை கண்டித்து இருக்கிறார்.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், குருநாதனை மகாலட்சுமி மற்றும் சுப்பிரமணியன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்பது உறுதியானது. இதனையடுத்து, அதிகாரிகள் சுப்பிரமணியன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.