#Breaking: திருப்பரங்குன்றத்தால் உண்டாகப்போகும் மதப்பிரச்சனை? இராமநாதபுரம் எம்.பி செயல்.. அண்ணாமலை கண்டனம்.!



Madurai Thiruparangundram Murugan Temple and Sikander Mosque Issue Annamalai 

 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது முருகன் கோவில் உள்ளது. இது பாண்டியர்களின் காலத்தில் இருந்து வழிபாட்டில் இருக்கும் கோவில் ஆகும். இதே மலையின் ஒரு பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. இந்து - இஸ்லாமிய மதத்தினர் எந்த விதமான பிரச்சனையும் இன்று அவரவர் இறைவனை வழிபட்டு வந்தனர்.

இதையும் படிங்க: சாதம் வடித்த நீர் விழுந்து, 3 வயது சிறுவன் பரிதாப பலி.. போராடி பறிபோன உயிர்.. மதுரையில் நடந்த சோகம்.!

இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், குடுமபத்துடன் சிக்கந்தர் தர்காவுக்கு சென்று ஆடு பலி கொடுத்து குடும்பத்துடன் அவரின் இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது மலைமீது முருகன் கோவில் இருப்பதால், தர்காவில் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள், பலி நடவடிக்கை கூடாது என காவலர்கள் சார்பில் தடுக்கப்பட்டுள்ளது. 

இராமநாதபுரம் எம்.பி தலைமையில் அசைவ உணவு சாப்பாடு

இதனால் சர்ச்சை உண்டாக, கடந்த ஒரு வாரமாக சிக்கந்தர் தர்காவுக்கு சென்று அசைவம் சமைத்து சமபந்தி விருந்து வைக்க வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தன. இதன் ஒரு பகுதியாக, இன்று இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில துணை தலைவர் நவாஸ் கனி தலைமையில், சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

அங்கு அதிகாரிகள் அவர்களை தடுத்தபோது, சமைத்த அசைவ உணவை எடுத்துச் செல்ல தடை இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தர்காவில், அசைவ உணவுகள் எடுத்து செல்லப்பட்டு சாப்பிடப்பட்டது. தற்போது இந்த விஷயம் இந்து அமைப்புகளிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மேலும், இராமநாதபுரம் எம்பி மதக்கலவரத்தை தூண்ட முற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அண்ணாமலை கண்டனம்

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டப்பதிவில், "ஆன்மீக பூமியான தமிழகத்தில், அனைத்து மதங்களைச் சார்ந்த ஆலயங்களுக்கும் அவற்றிற்கான வழிபாட்டு நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றின் புனிதம் காக்கப்பட வேண்டும். ஆனால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலை வைத்து நடைபெறும் நிகழ்வுகள் விரும்பத்தகாதவையாக இருக்கின்றன.

குறிப்பாக, ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் திரு. நவாஸ் கனி, இரு தரப்பினரிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் மீது கும்பலாகச் சென்று, அசைவ உணவு உண்டிருப்பது, முற்றிலும் தவறான செயல் மட்டுமின்றி, மதக்கலவரத்தை ஏற்படுத்தும் செயல்பாடுமாகும்.

சகோதரத்துவ நடைமுறை தொடரட்டும்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், உலகில் பல மதங்கள் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பே, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டு காலமாக, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்துடன், அனைத்து மதங்களுக்குமான வழிபாட்டு முறைகளை மதித்து நடந்து வருகின்றனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அதனைக் கெடுக்கும்படி நடந்து கொண்டிருப்பது, முட்டாள்தனமானது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

உடனடியாக, இது போன்ற சமூக அமைதியைக் கெடுக்கும் வீண் நடவடிக்கைகளைக் கைவிட்டு, இத்தனை ஆண்டு காலமாகத் தொடரும், சகோதரத்துவமான நடைமுறைகளையே தொடர வேண்டும் என்று, அனைத்து சமூக மக்களையும் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

 

 

இதையும் படிங்க: குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய LED பல்பு; மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நெகிழ்ச்சி செயல்.!