96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஆளில்லாத ராணுவ மைதானத்தில் ஆண் சடலம்... அதிர்ச்சியில் காவல்துறை.!
சென்னை நந்தம்பாக்கம் மைதானத்தில் மீட்கப்பட்ட ஆண் சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நந்தம்பாக்கம் சுந்தர் நகரில் ராணுவத்திற்கு சொந்தமான காலி மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தில் இருந்த மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் கடலமாக தொங்கி இருக்கிறார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த நபர் யார் ?என்ன? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்,
மேலும் இறந்த நபரின் சடலத்தை சோதனை செய்ததில் தூக்கு போடும் போது கழுத்தை இறுக்கியதற்கான எந்த தடயமும் இல்லை. இது காவல்துறைக்கு மேலும் சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது. இந்த சம்பவத்தை சந்தேக வழக்காக பதிவு செய்துள்ள காவல் துறை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.