மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பரோட்டா சாப்பிட்டு தூங்கிய வாலிபருக்கு திடீரென நள்ளிரவில் நேர்ந்த துயரம்! அதிர்ச்சி சம்பவம்!!
கடலூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் பரோட்டா சாப்பிட்டு தூங்கிய போது திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலிருந்து சிதம்பரம் வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வேலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு 44 வயது நிறைந்த கைலாஷ் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் சிதம்பரம் அருகே பெரியகுமட்டி என்ற கிராமத்தில் தங்கி வந்துள்ளார்.
அவர் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று மாலை தான் தங்கியுள்ள இடத்திற்கு வந்துள்ளார். பின்னர் அவர் பரோட்டா வாங்கி இரவு உணவாக சாப்பிட்டுவிட்டு தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் கைலாஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கைலாஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பரோட்டா சாப்பிட்டு தூங்கிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.