மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானத்திலிருந்து சிங்கக்குட்டியுடன் கெத்தாக வந்திறங்கிய வெளிநாட்டு பயணி! மடக்கிப் பிடித்த அதிகாரிகள்
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் சென்னை விமான நிலையத்திற்கு சிங்கக்குட்டியுடன் வந்து இறங்கி உள்ளார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருட்களை அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் இன்று தாய்லாந்திலிருந்து ஒரு நபர் சிங்க குட்டியுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் விமானம் வருவதற்கு முன்பாகவே அந்த பிடிப்பதற்காக அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை விமானம் மூலம் வந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் அதிகாரிகள் சோதனையிட துவங்கினர். இந்த சோதனையில் சிங்கக்குட்டியுடன் வந்த தாய்லாந்து நாட்டு பயணி அவர்களிடம் கையும் களவுமாக சிக்கினார்.
இதனை தொடர்ந்து அவரிடமிருந்து சிங்கக்குட்டியினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த நபரை சிங்கக்குட்டி உடன் மீண்டும் தாய்லாந்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.