மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாய் வீட்டுக்கு போன புதுமணப்பெண்., தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை..! நடந்தது என்ன?.!
கணவன் மற்றும் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி பெருமாள் பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் ஆவுடி. இவரது மகன் சுரேஷ் (வயது 30). அங்குள்ள வீரமங்கலம் பகுதியை சார்ந்தவர் உஷா (வயது 22). இவர்கள் இருவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை தொடங்கிய நிலையில், ஆடி மாதம் பிறந்ததால் உஷாவை பெற்றோர் அவரின் ஊரான வீரமங்கலத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது மனைவி உஷாவை நேரில் பார்க்க சென்ற சுரேஷுக்கும், மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுரேஷ் திடீரென தூக்கில் பிணமாக தொடங்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களின் உறவினர்கள் அறந்தாங்கி மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவே, தகவலலறிந்து சென்ற காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்துவதாக வாக்குறுதி கொடுத்ததின் பேரில், அனைவரும் அங்கிருந்து கலந்து சென்றனர்.
திருமணமான 45 நாட்களுக்குள் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. தற்கொலை செய்வதால் அவரது குடும்பமே நிலைகுலையும் வாய்ப்புள்ளது. இதனை புரிந்து யாரும் தற்கொலை செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது.