மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுபேருந்து - மோட்டார்சைக்கிள் மோதி பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பறிபோன உயிர்..!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியர்புரம் பகுதியைச் சார்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துப்பாண்டி. இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று திண்டுக்கல்லில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ரெண்டுலப்பாறை பிரிவு பகுதியில் திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து பயணித்துள்ளது.
அத்துடன் அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பலமாக மோதிய நிலையில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்துப்பாண்டி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பின் தகவலறிந்த காவல்துறையினர் முத்துப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.