#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஷேவிங் லோஷன், வார்னிஷை தொடர்ந்து மதுபோதைக்காக புதிய விபரீத முயற்சி! பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகநாடுகள் பலவற்றிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், 7000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 236பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய ஊரடங்கால் மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது அதனால் மது பிரியர்கள் பலரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் மேலும் சிலர் போதைக்காக வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு உயிரை விடும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவையை சேர்ந்தவர் பெர்னார்ட். இவர் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலைபார்த்து வந்துள்ளார்.
மதுபோதைக்கு அடிமையான இவர் போதைக்காக தன்னிடமிருந்த சானிடைசரில் தண்ணீர் கலந்து, உணவு எதுவும் சாப்பிடாமல் கடந்த இரு நாட்களாக குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதறிப்போன குடும்பத்தார்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.