திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளைஞரின் தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. தம்பியே அண்ணனை கொன்ற கொடூரம்..! காரணம் என்ன?..!
விஷம் குடித்து இளைஞர் தற்கொலை செய்த வழக்கில் அதிரடி திருப்பமாக தம்பியே அண்ணனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் டூவிபுரத்தை சேர்ந்தவர்கள் சாமுவேல் - அன்னலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் ஜீவன்ஜோஸ்வா தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஜீவன் ஜோஸ்வா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ஜோஸ்வாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் ஜீவன் ஜோஸ்வாவை கழுத்தை நெரித்தும், வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றயும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் தம்பி தவசுமணியை கைது செய்து விசாரணை செய்தபோது, அண்ணன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்தததால், கோபமுற்ற அவர் தனது அண்ணன் என்றும் பாராமல் கழுத்தை நெரித்து, வாயில் விஷம் ஊற்றி வலுக்கட்டாயமாக கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.