ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கள்ளக்காதலி மீது ஆசிட் வீச்சு.. பழக்கத்தில் தொடங்கி பரிதாபத்தில் முடிந்த சம்பவம்.!
திருமணம் செய்துகொள்ளக் கூறி வற்புறுத்தியதால் கள்ளக்காதலி மீது ஆசிட் வீசிய சம்பவம் தேவகோட்டையில் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சியில் வசித்து வருபவர் முத்துராமலட்சுமி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து தாயுடன் இருக்கிறார். அத்துடன் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
முத்துராமலட்சுமி தேனியில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது, போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், காலம் செல்ல செல்ல இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்பொழுது முத்துராமலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வத்தை வற்புறுத்த அதற்கு அவர் மறுத்து தகராறு செய்துள்ளார்.
சம்பவ தினத்தன்று செல்வம் மிகுந்த குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் முத்துராமலட்சுமியின் முகத்தில் ஆசிட்டை எடுத்து அடித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
ஆசிட் வீசியதில் முகம் வெந்த முத்துராமலட்சுமி அலறி துடிக்க, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், செல்வம் மேற்குவங்காளத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் மேற்கு வங்காளத்தில் சென்று, அவரை கைது செய்து தேவகோட்டை பகுதிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.